பேரவலத்தின் பின்னணியில் வெளிவந்த கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் சுரேஷ் சலேவிடம் ஏற்பட்ட மாற்றம்

2019 Sri Lanka Easter bombings Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Bimal Rathnayake Suresh Salley
By Benat Jun 11, 2026 11:02 AM GMT
Report

கோட்டாபயவுக்கு பயணத் தடை விதிக்கும் வரைக்கும் ஆரோக்கியமாக இருந்த சுரேஷ் சலே, பயணத் தடை விதித்தப் பின்னர் ஒரே நாளில் நோயாளியாக மாறிவிட்டார் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுரேஷ் சலேவுக்கு முழுமையான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

16 வருட சிறை! அரசியல்வாதிகள் பலருடன் பலத்த பாதுகாப்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சரண குணவர்தன

16 வருட சிறை! அரசியல்வாதிகள் பலருடன் பலத்த பாதுகாப்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சரண குணவர்தன

கோட்டாபயவின் அறிவிப்பு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டது.

2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஒரு சில தினங்களுக்குள் பின்னர் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக கோட்டாபய ராஜபக்ச அறிவித்தார்.

பேரவலத்தின் பின்னணியில் வெளிவந்த கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் சுரேஷ் சலேவிடம் ஏற்பட்ட மாற்றம் | Suresh Sallay Main Culprit Of The Easter Attacks

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும், ராஜபக்சர்களுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

குண்டுத் தாக்குதலின் பின்னர் நாட்டின் சுற்றுலாத்துறை சேவை மற்றும் கைத்தொழில் துறை ஆகியன முற்றாக வீழ்ச்சியடைந்தன. பொருளாதார பாதிப்புக்கு இதுவும் ஒரு பிரதான காரணியாக இருந்தது.

கத்தோலிக்க மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக திட்டமிட்ட வகையில் வெறுப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறான பின்னணியில் தான் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது சுரேஷ் சலே நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுரேஷ் சலே தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும், சுரேஷ் சலேவுக்கும் இடையில் தொடர்புண்டு என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக பல விடயங்கள் வெளியாகும் போது ஒரு தரப்பினர் பிரதான சூத்திரதாரியையும், தாக்குதலுக்கு உளவுப்பார்த்தவர்களையும் பாதுகாக்க போராடுகிறார்கள்.

நோய்வாய்ப்பட்ட சுரேஷ் சலே

உண்மையில் நாடு என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும். ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக இடையூறு விளைவிக்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் விசாரணைகளை இடைநிறுத்தப்போவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம் செல்கிறார். அப்போது அவர் பரிவாரங்களுடன் நீதிமன்றம் செல்லவில்லை.

பேரவலத்தின் பின்னணியில் வெளிவந்த கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் சுரேஷ் சலேவிடம் ஏற்பட்ட மாற்றம் | Suresh Sallay Main Culprit Of The Easter Attacks

ஆனால் ராஜபக்சர்களும், ரணில் விக்ரமசிங்கவும் நீதிமன்றம் செல்லும் போது பரிவாரங்களுடன் செல்கிறார்கள். சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.

அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தோம். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தற்போது சிறந்த முறையில் விசாரணைகள் இடம்பெறுகிறது.

கோட்டபய ராஜபக்சவுக்கு பயணத்தடை விதிக்கும் வரை ஆரோக்கியமாக இருந்த சுரேஸ் சலே பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னர் நோயாளியாக மாறிவிட்டார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இவருக்கு முழுமையான சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பல போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.

வங்குரோத்து நிலையடைந்த அரசியல்வாதிகளும் அவருக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். நாட்டு மக்கள் இவர்களை ஒருபோதும் கவனத்திற் கொள்ள போவதில்லை. வெகுவிரைவில் உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.  

சுரேஷ் சலே தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் பரபரப்புத் தகவல்! தீவிரம் அடையும் களம்

சுரேஷ் சலே தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் பரபரப்புத் தகவல்! தீவிரம் அடையும் களம்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சலே வழங்கிய உளவுத் தகவல்! அமைக்கப்பட்ட தனிக்குழு தொடர்பில் பொன்சேகாவின் தகவல்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சலே வழங்கிய உளவுத் தகவல்! அமைக்கப்பட்ட தனிக்குழு தொடர்பில் பொன்சேகாவின் தகவல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US