சுரேஷ் சலே விடயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு! வெளிவரவுள்ள பல தகவல்கள்
முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று(01) உத்தரவிட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சுரேஷ் சலேவின் மடிக்கணினி திறக்கப்பட்டால் பல தகவல்கள் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சுரேஷ் சலேவின் பல்வேறு பட்ட இரகசிய தகவல்கள் அடங்கிய கோப்புக்கள், பல்வேறு பொருட்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமே உள்ளன.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam