நான்கு மணிநேர வாக்குமூலம்..! சிஐடியிலிருந்து வெளியேறிய சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்
புதிய இணைப்பு
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் 'கெஹெல்பத்தர பத்மே'வுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் குழு தலைவர் 'கெஹெல்பத்தர பத்மே' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri