நடுவீதியில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே - மற்றொரு முன்னாள் சிஐடி அதிகாரி கைதாவாரா! நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி
குற்றப் புலனாய்வு அதிகாரிகளால், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே வீதியில் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நேற்று (25) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினரான கேணல் கெலும் மண்டுமகே தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த போதே மனுதாரர் தரப்பில் முன்னிலையான அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வழக்கு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அசாத் மௌலானாவின் அறிக்கை
இதன்போது அலி சப்ரி, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் சுரேஷ் சாலே பெரும் பங்காற்றியுள்ளார் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய நபர் தமிழ்ச்செல்வனை பிடிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.

மலேசியா சென்ற பின்னர் சுரேஷ் சாலேவாலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றைய முக்கியஸ்தர் குமரன் பத்மநாதன் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், தேசிய பாதுகாப்புடன் விளையாடுவது பொருத்தமற்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
வவுனியா பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக குற்றப் புலனாய்வுத் துறை, தனது கட்சிக்காரருக்கு எதிராக தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றும், அத்தகைய விசாரணையை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் அலி சப்ரி கூறியுள்ளார்.
பிள்ளையான் - சுரேஸ் சாலேவிற்கு வைக்கப்பட்ட இலக்கு! கைதின் பின்னணியில் உள்ள சதி.. கம்மன்பில பகிரங்க தகவல்
ஷானி அபேசேகர விசாரணை
குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளார் ஷானி அபேசேகரவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் இந்த விசாரணையின் மூலம் தனது கட்சிக்காரருக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அசாத் மௌலானா என்ற அரசியல் புகலிடம் கோருபவர் பிரித்தானிய தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற விசாரணைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவிருப்பதாக இந்திய மற்றும் உள்ளூர் உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரித்த போதிலும், அதைத் தடுக்க பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri