வடக்கு - கிழக்கில் ஆளும் தரப்பு ஆட்சியை கைப்பற்றுவதை தடுப்பதே எமது நோக்கம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Suresh Premachandran
By Kajinthan May 18, 2025 12:59 AM GMT
Report

இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றை சந்தித்து பேசியிருக்கின்றோம். அவர்கள் முன்னிலை வகிக்கும் இடங்களில் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை பொறுத்தவரையில் கொள்கை ரீதியான சில முடிவுகளை எட்ட வேண்டும் என கூறியிருந்தார்கள்.

அதாவது, மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் சாசனத்துக்கான முயற்சியான ஏக்கிய ராஜ்ய என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நாங்கள் இணைந்து தமிழரசுக் கட்சியிடம் இது குறித்து வலியுறுத்தும் போது அந்த விடயத்தை அவர்கள் கைவிட முடியும்படி செய்ய முடியும் என கூறியிருந்தார்கள்.

2009 இன் இறுதி யுத்த ஆதாரத்தை கேட்டு ஆபத்தில் சிக்கப் போகும் அநுர அரசாங்கம்!

2009 இன் இறுதி யுத்த ஆதாரத்தை கேட்டு ஆபத்தில் சிக்கப் போகும் அநுர அரசாங்கம்!

மைத்திரி காலப்பகுதி 

எங்களுக்கு அதில் மாறுபட்ட கருத்து இல்லாவிட்டாலும் இந்த புதிய அரசாங்கமானது புதிய ஒரு அரசியல் சாசனத்தை கொண்டுவருமா என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. அப்படி வருமாக இருந்தால் அது புதிய அரசியல் சாசனமாக இருக்குமா? அல்லது பழைய அரசியல் சாசனத்தினுடைய தொடர்ச்சியாக இருக்குமா என்பது கேள்வியாக உள்ளது.

வடக்கு - கிழக்கில் ஆளும் தரப்பு ஆட்சியை கைப்பற்றுவதை தடுப்பதே எமது நோக்கம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Premachandran Speech On Anura Gov

ஆகவே இல்லாத ஒரு விடயத்தை பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதுதான் எமது கேள்வியாக உள்ளது. அதனை நாங்கள் அவர்களுக்கு தெளிவாக சொல்லியிருந்தோம்.

எம்மை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இப்போது இருக்கக்கூடிய ஆளும் தரப்பு உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதை தவிர்த்து, தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக் கூடியவர்கள் இந்த மாகாண ஆட்சி அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தான் நாங்கள் ஈடுபடுகின்றோம்.


அந்தவகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ஆசனங்களை வைத்திருக்கும் இடங்களில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம்.

பல இடங்களில் தமிழரசு கட்சி முன்னிலை வகித்தாலும் அறுதிப் பெரும்பான்மை என்ற விடயங்கள் பெரும்பாலான இடங்களில் இல்லை. ஆகவே ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவுகள் தேவை. எங்களிடமும் அந்த ஆதரவை கோரியிருந்தார்கள். ஆகையால் அவர்களுக்கான ஆதரவுகளையும் நாங்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

அநுர அரசுக்கு நெருக்கடியாகும் புலனாய்வு அறிக்கை

அநுர அரசுக்கு நெருக்கடியாகும் புலனாய்வு அறிக்கை

 தமிழ் தேசியம் 

அதேசமயம் இந்த கூட்டு என்பது வெறுமனே ஆட்சி அதிகாரங்களுடன் போய்விட கூடாது. தமிழ் மக்களுடைய அதிகாரங்களை அல்லதை உரிமைகளை பெற்றுக் கொள்வதை நோக்கி இது நகர வேண்டும்.

நான்கு சபைகளில் தவிசாளர் அதிகாரங்களை எமக்கு தருமாறு நாங்கள் கோரியிருக்கின்றோம். அந்தவகையில் மன்னார் - மாந்தை, சாவகச்சேரி, கோப்பாய், மானிப்பாய் ஆகிய பிரதேச சபைகளில் இவ்வாறு தவிசாளர் அதிகாரங்களை வழங்குமாறு கோரியிருந்தோம். அதுபற்றி அவர்கள் ஆராய்ந்து கூறுவதாக கூறியிருக்கின்றார்கள்.

வடக்கு - கிழக்கில் ஆளும் தரப்பு ஆட்சியை கைப்பற்றுவதை தடுப்பதே எமது நோக்கம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Premachandran Speech On Anura Gov

ஆகவே அவர்கள் ஆராய்ந்து பதில் கூறிய பின்னர் நாங்கள், அவர்கள் கூறும் பதில் எவ்வாறு இருக்கப்போகிறது என்று பார்த்து ஏனைய முடிவுகளை எடுக்கக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறோம். எம்மை பொறுத்தவரை நாங்கள் ஒரு தெளிவான விடயத்தில் இருக்கின்றோம், வடக்கு - கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் ஆட்சி அதிகாரங்கள் என்பது தமிழ் மக்களின் கைகளில் இருக்க வேண்டும், தமிழ் தேசியத்தை அங்கீகரிப்பவர்களது கைகளில் இருக்க வேண்டும்.

ஆகவே அந்தவகையில் அந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மாத்திரமல்லாமல், எதிர்காலத்தில் தமிழ் மக்களினுடைய சிறப்பான உரிமைகளை பெற்றுக் கொள்ள கூடிய ஒரு கூட்டை நிறுவுவதற்கான ஒரு அடித்தளமாக இது இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் விரும்புகின்றோம். அதேபோல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற கருத்தும் ஏற்படுகின்றது.

அந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது முன்னர் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மாதிரி இல்லாமல், மாறாக அது ஒரு பதிவு செய்யப்பட்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான புரிந்துணர்வு உடன்படிக்கையாக அது இருக்க வேண்டும் வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. ஆகவே அவ்வாறான சில விடயங்கள் தொடர்பாக நாங்கள் அவர்களோடு பேசியிருக்கின்றோம். அவர்கள் அதற்கு பதில் வழங்கிய பின்னர் நாங்கள் அடுத்தகட்ட விடயங்கள் பற்றி ஆலோசிக்கலாம்" என்றார். 

துஷிதவை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு! விசாரணைகளை ஆரம்பிக்கும் சி.ஐ.டி

துஷிதவை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு! விசாரணைகளை ஆரம்பிக்கும் சி.ஐ.டி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US