தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சுரேஸ் பிரேமசந்திரன் வெளியிட்ட தகவல்
தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது பொது வேட்பாளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் என்பதனால் சுயேட்சையாக போட்டியிட முடியும். அதனால் அவர் சுயேட்சையாகவே போட்டியிடுகிறார்.
கட்சியின் முடிவு
தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட கூடிய 75 தொடக்கம் 80 பேர் வரையிலானவர்களின் பெயர்களை பரிசீலித்தே, பா.அரியநேத்திரனை தெரிவு செய்துள்ளோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த பலரும் எமக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். கட்சியின் முடிவு ஓரிரு நாட்களில் வெளிவரும் என நம்புகிறோம்.

நாம் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். எம்முடன் இணைந்து பயணிக்க விரும்புவோர் பயணிக்க முடியும். இன்னமும் ஓரிரு நாட்களில் வேட்பாளருக்கான கட்டுப்பணத்தினை செலுத்தவுள்ளோம்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam