மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Vavuniya TNA Suresh Premachandran Sri Lanka
By Theepan Mar 10, 2024 09:02 PM GMT
Report

பௌத்த பிக்குகளுடனும் இராணுவத்தினருடனும் சேர்ந்து மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கான அத்திவாரத்தைப் பொலிஸார் இடுகின்றனர் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெடுக்குநாறிமலையில் மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களைக் கைது செய்திருப்பதுடன், கோயிலுக்குள் சப்பாத்துக் கால்களுடன் சென்று அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சிவ பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் பொலிஸாரின் செயற்பாடுகளைக் கண்டித்தும், அங்கு பௌத்த பிக்குகளின் தலைமையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகளைக் கண்டித்தும் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளிநாடுகளில் உள்ள 600 இலங்கையர்களை அழைத்துவர விசேட நடவடிக்கை

வெளிநாடுகளில் உள்ள 600 இலங்கையர்களை அழைத்துவர விசேட நடவடிக்கை

மகா சிவராத்திரி நிகழ்வு

"இலங்கையின் அரசியல் சாசனத்தின் பிரகாரம் இலங்கை குடிமக்கள் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவும் வழிபடவும் அவர்களுக்கு முழுமையான உரித்துண்டு. ஆனால், அதேசமயம் இலங்கையில் பௌத்தத்திற்கு முதலிடம் என்றும் கூறப்படுகின்றது.

மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Preamachandran Media Report Vedukunari

அதன் காரணமாக பௌத்த பிக்குகளும் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஒன்றிணைந்து ஏனைய மதத்தலங்களை அழித்தொழிப்பதும் அந்த இடங்களில் புத்த விகாரையைக் கட்டுவதுமான செயற்பாடுகளில் கடந்த பல தசாப்தங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் அதனைப் போன்றே திருகோணமலையிலும் கிழக்கின் ஏனைய பகுதிகளிலும்  பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில் ஏனைய மதத்தலங்கள் இருந்த புராதான இடங்களில் புத்த விகாரைகளை நிறுவுகின்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் பூரணமான அனுசரணையுடனும் நிதிப்பங்களிப்புடனும் இந்த விடயங்கள் செயற்படுத்தப்படுகின்றன. 

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரியின்பொழுது வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் பல்லாண்டுகாலமாக வீற்றிருக்கும் ஆதிசிவன் கோயிலில் மகா சிவராத்திரியைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த சிவபக்தர்களைப் புத்த பிக்குகளும், பொலிஸாரும், அதிரடிப்படையினரும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டு அச்சுறுத்தியுள்ளதுடன் பலரைக் கைது செய்துள்ளனர்.

மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Preamachandran Media Report Vedukunari

இரவு முழுவதும் கண்விழித்து சிவனை வழிபட்டு அவர் அருளைப் பெறுவதற்கான சைவ மக்களின் வழிபாட்டு முறையே மகா சிவராத்திரியாகும். 

வெடுக்குநாறிமலையில் மக்கள் வழிபடுவதற்கு வவுனியா நீதிமன்றமும் ஆணை வழங்கியிருக்கக்கூடிய நிலையில், இரவு வழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என்று சொல்வதற்கும் அங்கு சென்ற அடியார்களை அடித்துத் துன்புறுத்துவதற்கும் பொலிஸாருக்கு எந்தவித அதிகாரமோ உரிமையோ கிடையாது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க அதன் பிரகாரமே அங்கு சகல வழிபாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே, அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கான எத்தகைய முயற்சிகளும் இடம்பெறவில்லை. 

மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Preamachandran Media Report Vedukunari

ஆனால், வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் முக்கியமாக கன்னியா வெந்நீரூற்று, குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை உள்ளிட்ட மேலும் பல புராதான சைவ சமய பிரதேசங்களில் புத்த பிக்குமார்களும் அவர்களுடன் இணைந்த குண்டர் கூட்டங்களும் சேர்ந்து தொடர்ச்சியாக பிரச்சினைகளை உருவாக்கி வருவது அரசுக்கும் ஜனாதிபதிக்கும் வெளிப்படையாகத் தெரியும். ஆனால், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எத்தகைய உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மிக நீண்டகாலமாக இந்நாட்டில் இன விடுதலைக்கான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரம் கோடி பெருமதியான சொத்துகள் அழிக்கப்பட்டன.

நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதற்கும் அதுவே காரணமாகவும் அமைந்தது. இன்று மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கான அத்திவாரம் இடப்படுகின்றது.

மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Preamachandran Media Report Vedukunari

தமிழ் மக்கள் மிகப்பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தென்பகுதியிலிருந்து பௌத்த பிக்குகள் வருவதும் இது தங்களது பிரதேசங்கள் என்று உரிமை கோருவதும் அங்கு புத்த கோயில்களைக் கட்டுவதும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதும் என்பது யுத்தத்துக்குப் பின்னர் ஒரு தொடர்கதையாக நிகழ்கின்றது. 

தமிழ் மக்கள் துன்புறுத்தல்

இந்த விடயங்களை கட்டுப்படுத்தப்படாவிட்டால் இலங்கை தொடர்ந்தும் வங்குரோத்து அடைந்த நாடாகவே இருக்கும். தமிழ் மக்களைத் துன்புறுத்துவதும் அவர்களது மத கலாசார நடவடிக்கைகளை சீர்குலைப்பதும் இந்த நடவடிக்கைக்கு இராணுவத்தினரையும் பொலிஸாரையும் ஈடுபடுத்துவதும் வெறுக்கத்தக்க அநாகரிகமான செயலாகும்.

ஜனாதிபதியும் அரசும் உதட்டளவில் இன நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசாமல் அதனைச் செயலளவில் காட்ட வேண்டிய தருணம் இது.

மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Preamachandran Media Report Vedukunari

இலங்கைக்கு மிகப் பெருமளவிலான சுற்றுலாப் பிரயாணிகளாக இந்திய மக்களே வருகின்றனர். அவர்களில் மிகப்பெருமளவிலானோர் இந்துக்களாகவும் இருக்கின்றனர்.

அவர்களோடு மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளிலிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் புராதானச் சின்னங்களைக் கண்டு தரிசிக்கவே விரும்புகின்றனர்.

ஆகவே, அந்தப் புராதானச் சின்னங்கள் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்துவிட்டு, சுற்றுலாப் பிரயாணிகளே வாருங்கள் என்று கூவுவதில் அர்த்தமில்லை.

மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Preamachandran Media Report Vedukunari

இலங்கையின் மிகப்பெருமளவிலான வருமானம் சுற்றுலாத்துறையையும் நம்பியிருக்கின்றது. ஆனால், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற சுற்றுலாத்துறையையும் நிர்மூலமாக்கும் நடவடிக்கைகளிலேயே இன்றைய அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இது நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்வதுடன் இலங்கையின் மதிப்பை சர்வதேச மட்டத்தில் குறைப்பதற்குமே உதவுமே தவிர, நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லாது என்பதை அரசுக்கும் ஜனாதிபதிக்கும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்."என குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மூன்று வருடமாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது

மட்டக்களப்பில் மூன்று வருடமாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகள் மக்களிடம் மீளக் கையளிப்பு

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகள் மக்களிடம் மீளக் கையளிப்பு

கனடாவை உலுக்கிய படுகொலை: இறுதிக்கிரிகைகள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவை உலுக்கிய படுகொலை: இறுதிக்கிரிகைகள் தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US