நல்லூரான் உட்பட வடக்கு ஆலயங்களில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வுகள் (Photos)
நல்லூர் ஆலய சூரசம்ஹார நிகழ்வு
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் சூரசங்கார நிகழ்வு இன்று(18)வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதன் போது முல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பகிறது.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு எம்பெருமான் உள்வீதியூடாக வலம் வந்து பின்னர் வெளிவீதியுலா வந்து சூரனுடன் போர் புரிந்துள்ளார்.
இந்த சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசித்து சென்றுள்ளனர்.
தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூரசம்ஹார நிகழ்வு
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று(18) சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
முருகனுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமாகி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது நாளான இன்று சூரசம்ஹாரம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் திரண்டு முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடைபெறும் போரை மையமாக கொண்ட சூரசம்ஹாரத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி-தீபன்
வவுனியா கந்தசாமி ஆலய சூரசம்ஹார நிகழ்வு
வவுனியாவில் பிரசித்தி பெற்ற வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது.
பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலயத்தில் இருந்து வெளி வீதிக்கு வந்த வந்த முருகப் பெருமான் மழைக்கு மத்தியிலும் மணிக்கூட்டு கோபுர சந்தி உள்ளடங்கிய ஏ9 வீதியில் சூரனுடன் போர் செய்து சூரனை வதம் செய்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
இதேவேளை, வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவில், நெளுக்குளம் முருகன் ஆலயம், கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம், பழனி முருகன் ஆலயம் உட்பட வவுனியா மாவட்டத்தில் உள்ள பல முருகன் ஆலயத்தில் சூரசம்ஹா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-திலீபன்
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சூரசம்ஹார நிகழ்வு
மன்னாரில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார நிகழ்வு இன்று (18) மாலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மேளதாளம், வாத்திய இசை முழங்க, அந்தணச் சிவாச்சாரியர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலய வளாகத்தில் சூரனுடன் போர் செய்து சூரனை வதம் செய்து பக்த அடியார்களுக்கு அருள் பாலித்தார்.
செய்தி-ஆசிக்

மகிந்த பதவி ஏற்ற நாளில் இருந்து ஆரம்பித்த அட்டூழியங்கள்! பறிக்கப்படுமா ராஜபக்சர்களின் குடியுரிமை(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







