நாடளாவிய ரீதியில் தொடர் மாநாடுகள்! மேலவை இலங்கை கூட்டணி தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு (Videos)
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் தொடர் மாநாடுகளை நடத்துவது என மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில், கட்சி ரீதியாக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கூட்டத்திற்கு ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 5 பேர் முன்னிலையாக வேண்டும் என்றும் அவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam