மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்தை பறித்தெடுத்த உச்சநீதிமன்றம் - செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டமை தவறென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று (29) வழங்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கொழும்பின் ஆடம்பரக் குடியிருப்புகள் அமைந்துள்ள மஹகம சேகர மாவத்தை (பெஜட் வீதி)யில் இரண்டு ஆடம்பரக் குடியிருப்புகளை ஒன்றிணைத்து, நவீனமயப்படுத்தி அதனை உத்தியோகபூர்வ இல்லமாகப் பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னதாக ஒக்டோபர் 15ஆம் திகதி மைத்திரியின் தலைமையில் நடைபெற்ற கடைசி அமைச்சரவையில் தான் வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தை பதவி ஓய்வின் பின்னரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டிருந்தார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam