பசில் ராஜபக்சவின் மீள் பிரவேசம்! மன்னாரின் வெடி கொளுத்தி கொண்டாட்டம்
பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்றதையடுத்து மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை (8) காலை கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொளுத்திக் கொண்டாடியுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சியின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இணைந்து பசில் ராஜபக்ச மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆதரவாளர்கள் பதாதைகளை காட்சிப்படுத்தியதுடன் வெடி கொளுத்தியும், இனிப்புக்கள் பரிமாறியும் கொண்டாடியுள்ளனர்.
இதேவேளை நானாட்டான் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் பொதுஜன பெரமுன கட்சியினர் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(8) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராகப் பதவி ஏற்றதுடன், அதன் பின்னர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


