சமூக ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க மக்களிடையே ஆதரவு
சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சிறுவர்களைப் பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்ட பயனாளர்களுக்கு வயதுப் பரிசோதனை கருவிகளை கட்டாயமாக்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு இரு கட்சிகளையும் சேர்ந்த மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெட்டா மற்றும் யூடியூப் போன்ற நிறுவனங்கள் சிறுவர்களை அடிமையாக்கும் வகையில் தமது செயலிகளை வடிவமைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்ட ரீதியான அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்து - இருவர் பலி
பரிசோதனை முறை
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 61 சதவீதமானோர் சமூக ஊடகங்களுக்குக் கடுமையான கண்காணிப்பு தேவை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், 66 சதவீதமானோர் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க வயதுப் பரிசோதனை முறையைக் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், சமூக ஊடகங்கள் சிறுவர்களுக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களின் மனநலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என 85 சதவீதமான அமெரிக்கர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனினும், பெரும்பாலான மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள போதிலும், நாளாந்தம் அதில் அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.