கண்டி அக்குறணை மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிக்சைப் பிரிவுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு
கண்டி (Kandy) மாவட்டப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் கோவிட் செயலணி அமைப்பினால் அக்குறணை மாவட்ட வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிக்கைப் பிரிவுக்கு நவீன வசதிகளைக் கொண்ட கட்டில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வைபவம் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாவட்டப் பணிப்பாளர் நிமல் விஜயசிரி (Nimal Vijayasiri) தலைமையில் நேற்று (04.05.2024) இடம்பெற்றுள்ளது.
பணிப்பாளர் பாராட்டு
நாட்டில் தனியார் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களுக்குத் தான் நன்கு தெரியும் அரசாங்க வைத்தியசாலையில் நடைபெறும் சிகிச்கையின் தன்மை எந்தளவுக்கு பெறுமதியானது என்று.
அரச வைத்தியசாலையில் நடைபெறும் சகல சேவைகளும் இலவசமானது. பொது மக்களாகிய நாங்கள் அரசாங்க வைத்தியசாலையின் சேவையைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று அக்குறணை ஸியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் நிமல் விஜயசிரி தெரிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றுகையில் “இவ் வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் மக்கள், மருந்து எடுப்பதற்காக வருபவர்கள்;குளிர் ஊட்டப் பட்ட இடத்தில் இருந்து மருந்தைப் பெற்றுச் செல்வதற்காக அப்பிரிவு முற்றாக குளிரூட்டப்பட்டுள்ளது.
ஊர் மக்களின் பங்களிப்பு
இந்த சேவையை ஊர் மக்களே செய்து தந்துள்ளனர். மேலும் வீட்டில் வைத்துப் பார்க்க முடியாத எந்தவொரு நோயாளியாக இருந்தாலும் அவர்களை வைத்தியசாலைக் கொண்டு வந்து நன்கு பராமரிக்கக் கூடிய வாட் வசதி ஒன்று தனியார்களினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே இவ் வைத்தியசாலையானது பல்வேறு வளங்களுடன் இயங்கி வருகின்றது.
அந்த வகையில் கண்டி மாவட்டப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஊடாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நவீன படுக்கையினைக் கொண்ட கட்டிலை வழங்கியுள்ளார்கள்.
மேலும் அவர்கள் எமது வேண்டுகோளுக்கு இணங்க மேலும் இரு கட்டில்கள் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்கள்” என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கையளிப்பு
இந்நிலையில், கண்டி மாவட்டப் பள்ளிவாசல் சமேளனத்தின் தலைவர் கே. ஆர். சீத்தீக் தலைமையிலான குழுவினர் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் நிமல் விஜயசிரி மற்றும் வைத்தியாலையின் சுகாதார அதிகாரி ஆகியோர்களிடம் கட்டிலை உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.
இதன் போது பள்ளிவாசல் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், கொரோனா செயலணி அமைப்பின் உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் இஸ்மாயீல், முன்னாள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரமீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட அமைப்பாளர் வஹாப் மாஸ்டர், ரூமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |