மட்டக்களப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பிள்ளைகள் கவனம்
மட்டக்களப்பில்(Batticaloa) உள்ள பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அவர்களது பெற்றோர்களுக்கு தாயார் ஒருவர் எச்சரிக்கை பதிவொன்றை இட்டுள்ளார்.
மட்டக்களப்பு - கோட்டை முனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு அண்மையில் மர்ம ஊசி ஒன்று ஏற்றப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த மாணவி தற்போது உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்த தாயார் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தரம் ஐந்தில் கல்வி பயிலும் குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சைக்கிளில் வந்த ஒரு இளைஞன், அந்த மாணவியிடம் உங்களுக்கு ஊசி ஏற்றப்பட்டதா என விசாரித்து விட்டு, இல்லையென்றதும், உங்களுக்கு மாத்திரம் தான் ஊசி ஏற்றப்படவில்லை எனக் கூறி ஒரு ஊசியை ஏற்றிச் சென்றுள்ளார்.
இதன் காரணமாக குறித்த மாணவிக்கு கடும் சுகயீனம் ஏற்பட்டதாக அந்த தாயார் தன்னுடை பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொதுமக்கள், பெற்றோர்கள் என அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்த தாயார் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல முறை தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
