ஏழு மாதங்களில் உப்பின் விலையை 400 ரூபாவாக உயர்த்திய அரசாங்கம்
ஏழு மாதங்களில் உப்பின் விலை 400 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒரு பக்கட் உப்பின் விலை 60 ரூபாவாவதற்கு 76 வருடங்கள் சென்றதாகவும், ஏழு மாதங்களில் அது 400 ரூபாவாக உயர்வடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு அரசாங்கமும் உப்பு, அரிசி போன்றவற்றில் இந்தளவு தரகுப் பணம் சம்பாதித்தது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு இயலாமையையும் மூடி மறைத்துக் கொள்ள கடந்த அரசாங்கங்களை குற்றம் சுமத்துவது வாடிக்கையாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளை தவிர்த்து வீண் விரயத்தை தவிர்த்து ஆட்சி செய்வதாக கூறும் அரசாங்கம் அந்தப் பணத்தைக் கொண்டு உப்பு, அரிசி, தேங்காய் போன்றவற்றின் விலைகளை குறைக்க முடியும் அல்லவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விரைவில் மின்சாரக் கட்டணங்கள் உயர்வடையும் எனவும் அது மக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமன்றி ஒட்டுமொத்த கைத்தொழிற்துறையையும் பாதிக்கும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டில் லாபமீட்டிய இலங்கை மின்சாரசபை ஏழு மாதங்களில் எவ்வாறு நட்டமடைந்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam