லங்காசிறியில் பிரசுரிக்கப்பட்ட செய்தியின் எதிரொலி! வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு புலம்பெயர் உறவுகள் வழங்கிய உதவி(Video)
லங்காசிறி ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தியின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர் வாழ் அராலியின் தொப்புள்கொடி உறவுகளால் குறித்த மருந்துப் பொருட்கள் நேற்றைய தினம் (22.02.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர் வாழ் அராலி உறவுகளின் நிதியை ஒருங்கிணைத்து, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்தராஜாவால் இந்த மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளன.
கையளிப்பு நிகழ்வு
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ரதினி காந்தநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கையளிப்பு நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்தராஜா, குறித்த உதவித்திட்டத்தை வழங்கி வைத்த நன்கொடையாளர்கள், வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தினர், வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
லங்காசிறி ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட செய்தியின் அடிப்படையில் இந்த உதவித்
திட்டம் கிடைக்கப்பெற்றுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.







உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
