ஹட்டனில் அனுமதியின்றி திறக்கப்பட்ட பல்பொருள் அங்காடி மீது தாக்குதல்: 4 பேர் கைது
புதிய இணைப்பு
ஹட்டனில் நகர சபையின் அனுமதியின்றி திறப்பட்ட பல்பொருள் அங்காடி மீது மாலை தாக்குதல் மேற்கொண்ட குற்றத்திற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(28.01.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நகரில் இன்று(28) அனுமதியின்றி திறக்கப்பட்ட பல்பொருள் அங்காடியை ஆராய்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வருமான வரி அதிகாரிகள் எதிர்வரும் நகர சபை கூட்டம் வரை கடையை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

கைது
இதனையடுத்து, மாலை வேளையில், மூடி வைக்கப்பட்டிருந்த கடையின் குளிரூட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ஹட்டன் கோட்ட கைரேகை அடையாள பிரிவு ஆகியன விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
ஹட்டன் நகர சபைக்குட்பட்ட பகுதியில் நகர சபையின் அனுமதியின்றி பல்பொருள் அங்காடி திறந்ததால் அப்பகுதி வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(28.01.2026) ஹட்டன் மணிகூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் குறித்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் எதிர்ப்பு
ஹட்டன் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட பல்பொருள் அங்காடியில் மீன், கோழி விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதால், அந்த பகுதியில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த பல்பொருள் அங்காடி திறப்பதற்கு கடந்த நகர சபை கூட்டத்தில் யோசனைகள் முன் வைக்கப்பட்ட போதிலும், அதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அனுமதியின்றி பல்பொருள் அங்காடி இன்று திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வர்த்தகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து, ஹட்டன் பொலிஸார், பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள், வருமான அதிகாரிகள் உட்பட அனைவரும் தலையிட்டு குறித்த பிரச்சினையினை தீர்ப்பதற்கு நகர சபை தலைவருடன் கலந்துரையாட வேண்டும் என தீர்மானம் எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நகர சபைத் தலைவருக்கு குறித்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த நகரசபை தலைவர், தற்போது உள்ள சட்டத்திட்டங்களின் படி, குறித்த இடத்தில் மீன், கோழி விற்பனைக்கு அனுமதி வழங்க முடியாது.
இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நகர சபை கூட்டத்தில் ஹட்டன் நகரில் மத்தியில் அமைந்துள்ள மீன், கோழி வர்த்தக நிலையங்கள் தொடர்பாக தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிகமாக மூடப்பட்ட சூப்பர் மார்க்கெட்
அதன் பின்னர், பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,
நான் இந்த கடையினை அதி நவீன குளிரூட்டிகளை பயன்படுத்தி மிகவும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் வாடிக்கையாளர்களுக்கும் தோட்ட மக்களுக்கும் மிகவும் மலிவான விலையில் கொடுக்க கூடிய வகையிலேயே இந்த மீன் வர்த்தகத்தினை ஆரம்பித்துள்ளேன்.

இந்த வியாபாரத்தை முன்னெடுப்பதற்கான தேவையான அனைத்து சட்டபூர்வமான ஆவணங்களையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து ஆராய்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வருமான வரி அதிகாரிகள் எதிர்வரும் நகர சபை கூட்டம் வரை குறித்த பல்பொருள் அங்காடியை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam