30 ரூபாய் இலாபத்துக்காக 5 இலட்சம் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீரை விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு பல்பொருள் அங்காடிக்கு நுவரெலிய நீதிவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நீதிமன்ற அதிகாரிகளின் கூற்றுப்படி, குறித்த பல்பொருள் அங்காடி 100 விலை கொண்ட குடிநீர் போத்தலை 130 ரூபாய்க்கு விற்றுள்ளது.
அதிகபட்ச அபராதங்களில் ஒன்றாக
இந்தநிலையில், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஒழுங்குபடுத்தப்பட்ட சில்லறை விலை நிர்ணயத்தை மீறியதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகமாக நிர்ணயித்ததற்காக நுவரெலிய மாவட்டத்தில் சமீபத்தில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதங்களில் ஒன்றாக, இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |