சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி ஆட்டம் : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை
ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்து சன்ரைசர்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்றபோட்டியில் 277 ஓட்டங்களை பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
17 ஆண்டுகளிலும் இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த அணியும் செய்ததில்லை என்ற நிலையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்று சாதனை
குறிப்பாக சன்ரைசர்ஸ் அணி சார்பில் சிறப்பாக விளையாடிய கிளாசன் 34 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 80 ஒட்டங்களை குவித்துள்ளார்.
முன்னதாக 263 என்ற அதிகபட்ச ஓட்டங்களை பெற்ற அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் இடம்பிடித்திருந்தது.
ஆனால் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு முதலாவது இடத்திற்கு சன்ரைசர்ஸ் அணி முன்னேறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |