விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்: நாசா வெளியிட்டுள்ள காணொளி
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) மற்றும் அவரது குழுவினர் பூமியில் இருக்கும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ள காணொளியொன்றை நாசா(Nasa) வெளியிட்டுள்ளது.
குறித்த காணொளியில், “பூமியில் உள்ள அனைவருக்கும், சர்வதேச விண்வெளி வீரர்களான எங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரவேற்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் 7 பேர் இங்கே இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர்.
To everyone on Earth, Merry Christmas from our @NASA_Astronauts aboard the International @Space_Station. pic.twitter.com/GoOZjXJYLP
— NASA (@NASA) December 23, 2024
அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ம் திகதி பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.இதன்காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பெப்ரவரியில்தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் காணொளி பதிவு ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.
காணொளியால் சர்ச்சை
அதனை தொடர்ந்து குறித்த காணொளியை பற்றி கேள்விக்கணைகளை தொடுத்துள்ளனர். அதாவது, விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருப்போம் என அவர்களுக்கு தெரியுமா? கிறிஸ்துமஸ் அலங்காரத்திற்கு தேவையான பொருட்களை நீண்ட நாட்களுக்கு முன்னரே கொண்டு வந்து விட்டீர்களா 8 நாட்கள் மட்டுமே விண்வெளி பயணம் என சொன்னவர்களிடம் எப்படி தொப்பிகள் வந்தன?
கிறிஸ்துமஸ் தொப்பிகள், அலங்காரங்களை யார் விநியோகம் செய்தது என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து நாசா அமைப்பானது காணொளி குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த நவம்பர் மாதம், இந்த கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அலங்கார பொருட்கள் ஸ்பேஸ் எக்ஸ் மூலம், அனுப்பி வைக்கப்பட்டது. அதில், வான்கோழி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், துண்டுகள் மற்றும் குக்கீகள் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுகளும் இருந்தன. இது தவிர, சில அறிவியல் பொருட்களும் இருந்தன என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |