கஜகஸ்தானில் விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம்: 38 பேர் பலி
புதிய இணைப்பு
கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு சென்ற அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, குறித்த விமானத்தில் மொத்தம் 67 பேர் பயணித்துள்ள நிலையில், இரண்டு குழந்தைகள் உட்பட 29 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட உயிரற்ற உடல்கள் எரிந்து மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், உடல்களை அடையாளம் காணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கஜகஸ்தானின் (Kazakhstan) அக்டாவ் நகருக்கு அருகே இன்று 67 பயணிகளுடன் ரஷ்யா நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 42 பேர் இறந்திருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த விபத்தில் 25 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அந்நாட்டின் அவசரக்கால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஜே2-8243 பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்துள்ளது.
திடீர் தரையிறக்கம்
இருப்பினும், க்ரோஸ்னியில் பனிமூட்டம் காரணமாக அந்த விமானம் திருப்பி விடப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Azerbaijani Airlines Plane Crashes in Kazakhstan. Embraer 190 aircraft makes emergency landing in Aktau. Reportedly carrying 67 passengers and 5 crew. #Azerbaijani pic.twitter.com/wvLsz73YlC
— Deccan Chronicle (@DeccanChronicle) December 25, 2024
அதேவேளை, விமானம் அவசரமாக தரையிறக்க முற்பட்ட வேளை அதில் தீப்பற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அவ்விமானத்தில் 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் முழுமையாக வெளிவராத நிலையிலும் மீட்பு பணிகளும் தீயணைப்பு பணிகளும் இடம்பெற்று வருவதாக அஅடையாளம் காணப்படும்ந்நாட்டு அவசரகால பிரிவு தெரிவித்துள்ளது.