அர்ச்சுனா எம்.பியை தகாத வார்த்தைகளால் திட்டிய சுனில் வட்டகல!
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல கோபம் காரணமாக அர்ச்சுனா எம்.பியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு திட்டியுள்ளார்.
தீர்மானம்
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல உரையாற்றிக் கொண்டிருந்த போது, நிலையியற் கட்டளையில் அர்ச்சுனா எம்.பி எழும்பி கேள்வி கேட்க முற்பட்டார்.
இதன்போது கோபமடைந்த பிரதியமைச்சர் சுனில் வட்டகல,“கதிரையில் உட்காரவும்,எல்லாவற்றுக்கும் மூக்கை நுழைப்பது,எங்கிருந்து இவரை நியமித்தீர்கள்?
ஒரு உறுப்பினருக்கு பதிலளிக்கும் போது இந்த பேயன் எப்பவும் எழும்புகிறான், என்று தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அச்சந்தர்ப்பத்தில் சபைக்கு தலைமையாக்கியவர் குறித்த வார்த்தையை வாபஸ் வாங்கிகொள்ளுமாறு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பிரதியமைச்சர் வட்டகல, குறித்த வார்த்தையை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தார்.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
