ஜனாதிபதி அநுரவின் எதிர்காலம்: வெளியான ஜோதிட கணிப்பு
2027-2029 ஆண்டுகளில் ஏற்படும் உள்ளக பிரச்சினைகளை சமாளிக்கும் தன்மையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என இலங்கையின் பிரபல ஜோதிடர் நிபுணர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்தியாவில் ஒரு சோதிடர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2042ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பார் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இராசி
அவர் ஜனாதிபதியின் இராசி தனுசு என குறிப்பிட்டே அதை கணித்து தெரிவிக்கிறார். எனினும் இது பொய்யாக சோடிக்கப்பட்டதாகும். சோதிடர் தர்மேந்திர சுரேஷ் அதனை கணித்ததாக கூறப்படுகின்றது. அந்த பெயரில் சோதிடர் ஒருவர் இல்லை. முடிந்தால் இணையத்தில் பாருங்கள்.
இந்திய சோதிடர்கள் எங்களை விட அதிகமான சித்தாந்தங்களை பாவிக்க கூடியவர்கள். ஆதலால் குறித்த சோதிடரை எங்கிருந்து பிடித்து வந்தார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஜனாதிபதி அநுரவின் இராசி விருட்சிகம் ஆகும்.
கடந்த 10 வருடங்களுக்கு முன் அவரிடம் இது தொடர்பில் கேட்ட போது அவர் என்னிடம் சொன்னார். அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்ற போது கோயிலில் நடைபெற்ற பூஜையில் ஐயர் இராசி என்ன என்று கோட்ட போது விருட்சிகம் என்று சொன்னார்.
நாகேந்திர யோகம்
விருட்சிக இராசிக்கு பெரும் யோகம் உண்டு. மேலும் ஜனாதிபதியின் இராசியில் நாகேந்திர யோகம் உண்டு. அவ்வாறானவர்களை இலகுவாக வீழ்த்த முடியாது.
அந்த யோகம் நாட்டு தலைவர்களுக்கு இருப்பது அரிதாகும். அதனாலேயே மூன்று வீதம் வாக்கு பலம் கொண்ட கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனால் நாட்டின் தலைவர் ஒருவருக்கு நாகேந்திர யோகம் இருப்பது சோதிட பார்வையில் முக்கியமானதாகும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



