நாசாவில் இருந்து ஓய்வு பெறும் சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் நாசாவில் இருந்து ஓய்வு பெறுவதாக, அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பாடசாலை கல்வியை படித்த சுனிதா, புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார்.
அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதா வில்லியம்ஸை 1998இல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அழைத்துக் கொண்டது.
27 ஆண்டுகள் நாசாவில்
2006 ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் விண்வெளிக்கு சென்றார்.
பின்னர் 2024 ஆம் ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் சில குழுவினருடன் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்கியிருந்துள்ளனர்.
286 நாட்கள் நாட்களுக்கு பின்னர் 2025 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தநிலையில், 27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam