அரசியல் செய்வதாக, அருட் தந்தை "சிறில் காமினி" மீது ராவணா பலய குற்றச்சாட்டு
அருட்தந்தை வணக்கத்துக்குரிய சிறில் காமினி, தாம் கூறியது உண்மையென்றால் குற்றப்புலனாய்வுத்துறைக்கு சென்று வாக்குமூலம் வழங்கவேண்டும் என்று ”ராவணா பலய” கோாிக்கை விடுத்துள்ளது.
தாம் கூறியமை தொடா்பில் தமக்கு நம்பிக்கையிருந்தால் அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வுத்துறைக்கு சென்று வாக்குமூலம் வழங்கவேண்டும் என்று கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளா் சந்திப்பின்போது ராவணா பலயவின் தேசிய அமைப்பாளா் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரா் கோாிக்கையை முன்வைத்தாா்.
"இலங்கை அரச புலனாய்வுத்துறையின் தலைவரான சுரேஸ் சாலி, உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியதாாியான சஹ்ரான் ஹாசிமுடன் தொடா்பு வைத்திருந்ததாக அருட்தந்தை சிறில் காமினி, குற்றம் சுமத்தியிருந்தாா்.
இதன் மூலம், சுரேஸ் சாலி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் தொடா்புக்கொண்டிருந்தாா் என்பதை சொல்லாமல் சொல்லும் விதத்தில் சிறில் காமினியின் கருத்து அமைந்திருந்தது என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரா் குறிப்பிட்டாா்.
இது தொடா்பில் வாக்குமூலம் வழங்க, குற்றப்புலனாய்வுத்துறை அழைத்து போது அதற்கு உடன்படாத சிறில் காமினி, நீதிமன்றத்துக்கு சென்றமை ஏற்கமுடியாதது என்றும் தேரா் குறிப்பிட்டாா்.
இவா்கள், தாம், கூறுவதற்கு எல்லாம் ஜனாதிபதி நடமாட வேண்டும் என்று நினைக்கின்றனா். அதனை ஏற்கமுடியாது என்றும் அவா் தொிவித்தாா்.
இவா்கள், இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசியல் செய்வதாக தேரா் குற்றம் சுமத்தினாா். அவா்கள் சஹ்ரானை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனா் என்றும் அவா் குறிப்பிட்டாா். வடக்குகிழக்கு போாின்போது கத்தோலிக்க குருமாா் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவே செயற்பட்டதாக அவா் குற்றம் சுமத்தினாா்.
இலங்கையில் நீதியை காக்கும் இடமே குற்றப்புலனாய்வுத்துறை என்றும் தேரா் தொிவித்தாா்.
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவே கத்தோலிக்க குருமாா் செயற்பட்டதாகவும் அவா் தொிவித்தாா். இலங்கையில் இன்று இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட அரசியல்வாதிகள் உள்ளனா். பிரித்தானியாவின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட அரசியல்வாதிகள் உள்ளனா் என்றும் தேரா் தொிவித்தாா்.
இதேவேளை கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவை கொலை செய்ய வந்தனா் என்றுக்கூறி, புலனாய்வுத்துறையைக் காட்டிக்கொடுத்தமையால் 12 புலனாய்வுப்பிாிவினா் கொல்லப்பட்டனா்.
எனினும் ரணிலை கொலை செய்ய எவரும் நினைத்திருக்கவில்லை என்றும் தேரா் குறிப்பிட்டாா்.
இந்தக் குற்றச்சாட்டுக்காக ரணிலை சிறையில் அடைத்திருக்கவேண்டும் என்றும் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரா் தொிவித்தாா்.

பதினாறாவது மே பதினெட்டு 17 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
