மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரிஷி சுனக்: வெளியான காணொளி
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்ற போது தனது வளர்ப்பு நாய் நோவாவையும் அழைத்து சென்றுள்ளனர்.
குறித்த பூங்கா பகுதியில் நாயை அழைத்து வர தடை உள்ளது. ஆனால் அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், பூங்காவுக்குள் நாய்களை அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளமையை நினைவுப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து நாய் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
"வனவிலங்குகள் மற்றும் கிராமப்புறச் சட்டம் 1981ன் கீழ் வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பது குற்றம்" என்று தெளிவாகக் குறிப்பிடும் அடையாளத்துடன் வீடியோ தொடங்குகிறது.
இதனால் ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச ஊடகமொன்று பொலிஸ் அதிகாரி மற்றும் பிரதமரின் நெருக்கமான பாதுகாப்புக் குழுவில் ஒருவரிடம் சுனக் மன்னிப்பு கேட்பாரா என்று கேட்கப்பட்டபோது, வீடியோ குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அத்துடன் இக் காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்களும் வெளியிடப்படவில்லை.
ஒரு வீடியோ பிரதமர் ரிஷி சுனக்கை சிக்கலில் சிக்க வைப்பது இது முதல் முறையல்ல.
ஏற்கனவே அவர் கோவிட் கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது ஆகிய சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
You may like this video

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
