நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கஜேந்திரகுமார் எம்.பிக்கு அழைப்பாணை
மல்லாகம் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை (Gajendrakumar Ponnambalam) நாளை (14) முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில்..
யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு , போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தப் பகுதிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் ஒரு குழுவுடன் வந்து தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் கறுப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |