முன்னாள் அரசியல் கைதி ஒருவருக்கு அழைப்பாணை விடுத்த ரிஐடி விசாரணை பிரிவு
வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரைப் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரி.ஐ.டி) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணை இன்றைய தினம் (05.06.2023) விடுக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.
வவுனியா - தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரையே இவ்வாறு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
இவரை நாளைய தினம் (07.06.2023) அன்று காலை 9 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பிரிவு 01 இன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய, வாக்குமூலம் ஒன்றைத் தருவதற்கு, 2023ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணிக்குப் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
