நீதிமன்றில் முன்னிலையான வேலன் சுவாமிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு (Video)
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த வேலன் சுவாமிகள் மற்றும் சிவாஜிலிங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னை நாள் தவிசாளர் ஆகியோர் சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் கட்டளை உத்தரவிட்டுள்ளது.
மேலதிக செய்தி : யது
முதலாவது இணைப்பு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் (07.08.2023) காலை 9 மணிக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணை கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அழைப்பாணை
சட்டமுறையற்ற போராட்டம் நடைபெற்றுள்ளது என தெரிவித்தே குறித்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னை நாள் தவிசாளர் ஆகியோரை இன்றைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan