நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏலத்தில் வாங்கி விற்கப்படுகின்றனர்: எம்.ஏ.சுமந்திரன்
விளையாட்டு வீரர்களை போன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏலத்தில் வாங்கி விற்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையின் இணைய எற்பாட்டில்
பிறைடர்ஸ் பிறீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தினை அங்குராப்பணம் செய்யும்
நிகழ்வு கடந்த (28) நாச்சிமார் வீதியில் உள்ள தனியார் விடுதி
ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டத்துறையிலும், சட்டத்தரணிகள் மனுதாரர்களிடம் இருந்து பணம் வாங்காமல் நீதிமன்றத்தில் வழக்கினை தொடங்க வேண்டிய நிலை ஆரம்பகாலத்தில் இருந்தது.
சில நாட்களுக்கு முன்னர் ஏல விற்பனையினையும் அரசியலில் கண்டு இருப்பீர்கள். ஆரம்பத்தில் நாடாளுமன்றத்திற்கு போகின்றவர்கள் வேதனம் கொடுப்பது இல்லை சேவை தான் செய்ய வேண்டும்.
நாட்டின் அரசியல் நிலவரம்
பிரித்தானிய நாடாளுமன்ற மரபுகளை கொண்ட புத்தங்களை படிக்கின்ற போது அது சேவையாக தான் இருக்கும். பின்னர் பிரயாணத்திற்காக வேதனம் கொடுக்கப்படுகின்றது.
இலங்கையிலும் அவ்வாறு தான் ஒவ்வொரு அமர்வுக்கும் வந்து போவதற்கு தான் வேதனம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது எமக்கு சம்பளம் கொடுக்கப்படுகின்றது ஆனால் பெரியளவில் இல்லை சம்பளம் என்ற பெயரில் ஏதோ கொடுக்கின்றார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏலத்தில் வாங்கி விற்கப்படுகின்றனர்"என தெரிவித்துள்ளார்.
இதில் யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தலைவர் ஏ. நிலாந்தன், யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் யாழ். மாநகர ஆணையாளர் ரீ.ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.