ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியை பார்வையிட நேரில் சென்றுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கிரிக்கெட் போட்டியை பார்வையிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய ரணில்
மைதானத்திற்கு வருகை தந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய ஜனாதிபதி மைதானத்திற்கு வருகை தந்த மாணவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியைக் காண வந்திருந்த மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்களான அநுராத ஜயரத்ன, ரவி கருணாநாயக்க மஹிந்தானந்த அலுத்கமகே, ஹர்ஷ டி சில்வா மற்றும் சாகல ரத்நாயக்க, எம். ஏ. சுமந்திரன், சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
அசின், சிம்பு இணைந்து நடிக்கவிருந்த கைவிடப்பட்ட படம்.. இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா! First லுக் போஸ்டர் இதோ Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri