இலங்கையின் எதிர்கால திட்டங்கள்! பிரித்தானிய தூதுவரை சந்தித்த சுமந்திரன்
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக்கைஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இன்று(18) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரவு - செலவுத் திட்டம்
ஆண்ட்ரூ பேட்ரிக்கின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது நாட்டின் சமகால அரசியல் நிலவரம், அரசின் நடவடிக்கைகள், தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள், வரவு - செலவுத் திட்ட யோசனைகளின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், அந்தத் தீர்மானத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையின் தற்போதைய நிலைவரம் மற்றும் அதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவு செய்வதற்கான சாத்தியப்பாடு என்பன பற்றி ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் சுமந்திரன் கேட்டறிந்துள்ளார்.
ஜெனிவா அமர்வு
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஜெனிவா அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்குபற்றி உரையாற்றவிருக்கின்றார்.
அந்த உரையின் பின்னர் இலங்கை விடயத்தை ஜெனிவாவில் கையாளும் முறைமை குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியும் என்று தூதுவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான இணை அனுசரணை நாடுகளின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
