விரைவில் சுமோவுக்கு நிரந்தர ஓய்வு...!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அவரது கும்பலுக்கு விரைவில் நிரந்தர ஓய்வு கிடைக்கும் என மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
அநுர அரசுக்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் இன்று பிழையானவர்களைத் தெரிவு செய்துவிட்டோம் என வருத்தப்படுவதாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இட்ட முகநூல் பதிவிலேயே திலீப்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முகநூல் பதிவில் மேலும்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இனிக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் கிடையாது.
நிரந்தர அரசியல் ஓய்வு
சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை அநுர அரசு செய்வதில்லை என்பதால் தமிழ்த் தேசிய அழிவு அரசியலை வைத்து பிச்சை எடுக்க முடியாத நிலைமை.
தென்னிலங்கையில் ரணில், ராஜபக்ச, பண்டாரநாயக்க குடும்பங்கள் நிரந்தர அரசியல் ஓய்வுக்கு செல்வது போல் விரைவில் சுமோ கும்பலுக்கும் ஓய்வு கிடைக்கும்.
ஆனால், எந்தவொரு அரசு கொடுப்பனவுகளும் கிடைக்காது. அஸ்வெசுமவுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் - என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
