கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் உறவினர்களுக்கு முக்கிய தகவல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்பாடு மண்டபத்திற்கு பார்வையாளர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்குமாறும் மற்றும் அதற்கேற்ப வருகையைத் திட்டமிடுமாறும் கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
நுழைதற்கான கட்டுப்பாடு
புறப்படும் மண்டபத்திற்கு உச்ச நேரங்களில் பார்வையாளர்கள் நுழைதற்கான கட்டுப்பாடு, சீரானமுறையில் முன்னெடுக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை புறப்படும் பகுதிக்கு பயணிகள் அல்லாதோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடையற்ற சேவை
இந்த மாற்றமானது அனைத்து பயணிகள் மற்றும் விமான நிலைய வருகையாளர் அனைவருக்கும் எளிதான மற்றும் தடையற்ற சேவையை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலைமை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri