முடிந்தால் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் - சுமந்திரனுக்கு சுகாஷ் சவால்!

Sri Lankan Tamils M A Sumanthiran Mahinda Rajapaksa
By Kajinthan Sep 11, 2025 06:00 PM GMT
Report

சுமந்திரனை நோக்கி சில கேள்விக்கணைகளை தொடுத்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், அவை தவறாக இருந்தால் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுமந்திரனுக்கு சவால் விடுத்துள்ளார்.

சுகாஷ் மக்களை தவறாக வழி நடத்துவதாக சுமந்திரன் தெரிவித்த நிலையிலேயே சுகாஷ் இவ்வாறு கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.

இறுதியில் நடுங்கிய மகிந்த! வீட்டுக்குள் அவசரமாக காரில் நுழைந்த முக்கிய புள்ளி..

இறுதியில் நடுங்கிய மகிந்த! வீட்டுக்குள் அவசரமாக காரில் நுழைந்த முக்கிய புள்ளி..

 இலங்கை அரசு

அவர் கேள்வி எழுப்புகையில்,

1) நீங்கள் பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்த 2010களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பகிரங்க விவாதத்தில் “தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தவறானது” என்று கூறி விடுதலைப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்தது நானா? நீங்களா?

முடிந்தால் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் - சுமந்திரனுக்கு சுகாஷ் சவால்! | Sumanthiran Vs Sugash Legal Challenge

2) தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலைக்கு ஆதாரங்களில்லை என்று பச்சைப் பொய்யைக் கூறி இலங்கை அரசைக் காப்பாற்றியது நானா? நீங்களா?

3) தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலையை (Genocide) வெறும் “யுத்தக் குற்றங்கள்” (War crimes) என்று மலினப்படுத்தியது நானா? நீங்களா?

4) 2015 - 2019 மைத்திரி - ரணில் ஆட்சியில் அறிமுகப்படுத்த முற்பட்ட ஒற்றையாட்சிக்குட்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய யாப்பைச் சட்டம் தெரிந்த சட்டத்தரணியாக இருந்தும்  “சமஷ்டி” என்று பொய்யுரைத்தது நானா? நீங்களா?

நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை

நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை

 தமிழினம்

5) முன்னாள் ஜனாதிபதிகள் ரணிலோடும் ராஜபக்சகளோடும் மாறி மாறிக் கொஞ்சிக்குலாவி தமிழினத்தையே சிங்களத்திடம் அடகு வைத்தது நானா? நீங்களா?

முடிந்தால் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் - சுமந்திரனுக்கு சுகாஷ் சவால்! | Sumanthiran Vs Sugash Legal Challenge

6) சிங்கள பௌத்த பேரினவாத JVPயோடு சேர்ந்து மே தின ஊர்வலத்தில் பங்கேற்றுச் சிங்களக் கட்சிகளுக்குத் தமிழர் தாயகத்தில் அங்கீகாரம் கொடுத்தது நானா? நீங்களா?

7) தமிழினத்திற்கான தீர்வைப் பெறக்கூடிய பல சந்தர்ப்பங்களை அற்பச் சலுகைகளுக்காகச் சிங்களத்திடம் அடமானம் வைத்தது நானா? நீங்களா?

8)ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணையைக் கோராது உள்ளக விசாரணையான “கலப்புப் பொறிமுறைக்கு” இணக்கம் தெரிவித்து ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் துரோகமிழைத்தது நானா? நீங்களா?

9) தமிழ் மக்கள் இராணுவப் பிரசன்னத்தை எதிர்த்துநிற்க STF பாதுகாப்பில் உலா வந்தது நானா? நீங்களா?

10) இராணுவத்துக்கு எதிராக ஹர்த்தால் என்று நாடகமாடிவிட்டு, உலகத்திலேயே முதல் தடவையாக காலையோடு ஹர்த்தாலை நிறைவுசெய்த அரசியல் வேடதாரி நானா? நீங்களா?

மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!

மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!

அரசியல் துரோகங்கள்

இப்படி உங்களின் அரசியல் துரோகங்களும் திருகுதாளங்களும் இன்னும் நிறையவே இருக்கின்றது.

முடிந்தால் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் - சுமந்திரனுக்கு சுகாஷ் சவால்! | Sumanthiran Vs Sugash Legal Challenge

மக்களைத் தவறாக வழிநடாத்துபவனாக இருந்திருந்தால், நீங்களும் உங்கள் மகளும் ஒன்றாக இருந்த புகைப்படத்தைச் சிலர் தப்பாகச் சிருஷ்டிக்க முற்பட்டபோது, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து முதலாவது நபராக முன்வந்து பகிரங்கமாக அந்த விடயத்தைக் கண்டித்திருக்க மாட்டேன்.

இப்பொழுதும் கூறுகின்றேன், தமிழினத்தின் தற்போதைய கையறு நிலைக்கு நீங்களும் உங்கள் கட்சியுமே பிரதான காரணம். நான் ஏதேனும் தவறாக அல்லது பொய்யாக எழுதியதாகக் கருதினால், நீங்கள் தாராளமாக எனக்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

நீதிமன்றத்தில் சந்திப்போம். தயவுசெய்து இனியாவது இனத்தைக் காட்டிக் கொடுத்து அரசியல் பிழைப்பு நடத்தாது திருந்தி வாழ முயற்சி செய்யுங்கள், அல்லது வரலாறு உங்களை மன்னிக்காது என தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US