பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக வரும் புதிய சட்டமூலம் மேலும் மிக மோசமானது! சுமந்திரன்

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran
By Rakesh Dec 22, 2025 06:57 AM GMT
Report

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விடவும் மிகவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக நீக்குவதை விடுத்து, அதனைப் பதலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்க்கவிருக்கின்றனர் எனவும் கூறியுள்ளார். 

தற்போது நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நல்லூர் ஆலயத்தையும் இடிக்க வேண்டும்! தையிட்டி பதற்றத்திற்கு மத்தியில் அர்ச்சுனா கிளப்பிய சர்ச்சை

நல்லூர் ஆலயத்தையும் இடிக்க வேண்டும்! தையிட்டி பதற்றத்திற்கு மத்தியில் அர்ச்சுனா கிளப்பிய சர்ச்சை

அதனை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்கள்

பயங்கரவாத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், அந்தச் சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கிலும் கடந்த காலங்களில் நாடு முழுவதும் கையெழுத்துப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அதனைப் பதிலீடு செய்யும் வகையில் முன் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பவற்றின் உள்ளடக்கங்களை விடவும் மோசமான விடயங்கள் இந்தப் புதிய வரைவில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன எனச் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி எதிரணியாக இருந்த வேளையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்படும் அதேவேளை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பிரத்தியேக சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக வரும் புதிய சட்டமூலம் மேலும் மிக மோசமானது! சுமந்திரன் | Sumanthiran Statement Regarding Ata

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

பதிலீடு செய்யப்படும் சட்டம்

அதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றதே தவிர, பிறிதொரு சட்டத்தின் ஊடாக அச்சட்டம் பதிலீடு செய்யப்படும் எனக் கூறப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் புதிதாகப் பிறிதொரு சட்டத்தைக் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஆகவே அந்தச் சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான நடவடிக்கைகளைத் முற்றாக எதிர்ப்போம் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்

அதுமாத்திரமன்றி நீதி அமைச்சால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய வரைவின் உள்ளடக்கங்கள் மிக மோசமானவையாக இருப்பதாகவும், அவைபற்றி விரிவாக ஆராய்ந்து தமது கரிசனைகளை வெகுவிரைவில் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US