சுமந்திரன், சிறிதரன் எம்.பிக்கள் யாழ் . வைத்தியசாலைக்கு விஜயம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் இன்று காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா மற்றும் வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதோடு வைத்தியசாலையில் தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய உபகரண பற்றாக்குறை என்பன தொடர்பிலும் ஆராய்ந்தனர்.
அத்தோடு, வைத்தியசாலை விடுதிகளையும் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான மகப்பேற்று விடுதி
அமைக்கப்பட வேண்டும், சிறுநீரக நோயால் பாதிக்கப்படும் மக்களுக்குச் சிகிச்சை
வழங்கும் சிகிச்சைக் கூடம் இடவசதி இல்லாத நிலையில் காணப்படுகின்றது. அதற்கும்
ஒரு சிறந்த இடம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள்
வைத்தியர்களால் முன்வைக்கப்பட்டன.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan