IMF நிபந்தனைகளை சட்டமூலமாக்குவதற்கு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது!சுமந்திரன்(Video)
ஐ.எம்.எப் நிபந்தனைகளை சட்டமூலமாக்குவதற்கு இந்த அரசுக்கு மக்கள் ஆணைகிடையாது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பருத்தித்துறையில் இன்றைய தினம்(17.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாணய நிதியத்தின் இணக்கப்பாடு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பான விவாதம் எதிர்வரும் (25.04.2023) ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை “சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் இனங்கிய இனக்கப்பாடு என்ன” என்ற விடயம் ஜனாதிபதியால் முழுமையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதேவேளை மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான இலகுவான சட்டமூலமொன்றை (25.04.2023) அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்றேன். இதனை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டால் இரண்டு வாரங்களுக்குள் அதனை சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த முழுமையான கருத்துக்களை பின்வரும் காணொளியில் காணலாம்,



