காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானி..! அரசாங்கத்திடம் சுமந்திரனின் கேள்வி

M A Sumanthiran Government Of Sri Lanka Northern Province of Sri Lanka
By Rakesh Jun 21, 2025 03:25 PM GMT
Report

காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தீர்மானித்திருந்த அரசாங்கம், குறித்த இரத்து செய்யும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஏன் தாமதிக்கிறது என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வினவியுள்ளார்.

தனது முகநூலில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும்,

வடக்கில் 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணயச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

இலங்கையில் மற்றுமொரு கோர விபத்து - பெண்கள் உட்பட மூன்று பேர் பலி - பலர் காயம்

இலங்கையில் மற்றுமொரு கோர விபத்து - பெண்கள் உட்பட மூன்று பேர் பலி - பலர் காயம்

கால அவகாசம்

அந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தி சட்ட மறுப்புப் போராட்டத்தை நடத்துவது குறித்து நாம் வழங்கிய காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு நாள் இருக்கையில், அதனை மீளப்பெறப் போவதாகக் கடந்த மாதம் 27ஆம் திகதி அரசு அறிவித்தது.

அந்த வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படாததன் காரணமாக, அது குறித்து கடந்த 12ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்தேன்.

கடந்த செவ்வாயன்று இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்குச் சட்டமா அதிபர் நேற்று வரை கால அவகாசம் கோரியிருந்தார்.

காலக்கெடு 

அதனையடுத்து, நேற்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரசின் முடிவை அறிவிப்பதற்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை சட்டமா அதிபர் மீண்டும் கால அவகாசம் கோரியிருக்கின்றார்.

காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானி..! அரசாங்கத்திடம் சுமந்திரனின் கேள்வி | Sumanthiran Questions Gazette On Northern Lands

இது மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு நாள் அவகாசத்தை மாத்திரமே கொண்டிருக்கின்றது.

அவ்வாறெனில், இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் தீர்மானித்திருப்பதாகக் கூறியதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு தயங்குவது ஏன்? - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு 5 லட்சம் அபராதம்! பொலிஸாரின் விளக்கம்

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு 5 லட்சம் அபராதம்! பொலிஸாரின் விளக்கம்

தீவிரம் அடையும் ஈரான் - இஸ்ரேல் போர் - இலங்கைக்கு உதவும் இந்தியா

தீவிரம் அடையும் ஈரான் - இஸ்ரேல் போர் - இலங்கைக்கு உதவும் இந்தியா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US