சகல மக்களுடனும் இணைந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்! சுமந்திரன் பகிரங்க எச்சரிக்கை
அடக்குமுறை தொடருமாக இருந்தால் அதற்கு எதிராக தாம் சகல மக்களுடனும் சேர்ந்து வெவ்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபடுவோம் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்யைில், ஜோசப் ஸ்டாலினை கைது செய்தமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அமைதியான போராட்டத்தை நடத்துவதற்கு இந்த நாட்டில் உரிமை உண்டு.
மக்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி
அது சட்ட மீறல் அல்ல. இந்த நிலையில் அரசாங்கம் தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது.
இந்த அடக்குமுறை தொடருமாக இருந்தால் இதற்கு எதிராக நாம் சகல மக்களுடனும் சேர்ந்து வெவ்வேறுவிதமான போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.