சீனக்காரனின் புகைப்படம் சுமந்திரனிடம் - வெடித்தது புதிய சர்ச்சை
யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் போது, சீன பிரஜைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
எனினும் அவரது குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என ஆதாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் பிரஜை என சுமந்திரனால் அடையாளப்படுத்தப்பட்ட நபர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமியர் என்பது தெரிய வந்துள்ளது. அக்கரைப்பற்றை சேர்ந்த இஸ்லாமிய மொஹமட் ஹனிபா என்பவரே சீனப் பிரஜை என சுமந்திரனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறித்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும்போது சீன தொழிலாளர்களிற்கு வாய்ப்பளிப்பது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவினை தற்போது நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் சீனப் பிரஜை அல்லர் எனத் தெரிவித்துள்ள பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், "அவர் இலங்கையர்.
இஸ்லாமிய சகோதரர். அவருடைய பெயர் மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹனிஃபா. அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவர் குடத்தனையில் திருமணம் செய்து, அம்பனில் குடியேறியுள்ளார். வீதித் திட்ட ஒப்பந்தக்காரரான என். எம் நிர்மாண பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகின்றார்" என்று தனது ருவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள சுமந்திரன் எம்.பி, "இந்த நபர் சீன நாட்டவர் அல்லர். இலங்கையர் என்பது எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பிழைக்கு வருந்துகின்றேன். எதிர்காலத்தில் வடக்கில் பணிபுரியும் பிற உண்மையான சீனர்களின் படங்கள் இடுகையிடப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.





அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
