சுமந்திரனை பிரதி சபாநாயகராக்க முயற்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ததையடுத்து, அந்தப் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தகவல் வட்டாரகள் தெரிவித்துள்ளன.
பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவை நியமிக்க ஆளும் தரப்பு யோசனைகள் முன்வைத்துள்ளன.
எனினும் தான் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே அந்த பதவிக்கு போட்டியிடுவேன் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் பிரதி சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளும் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படி நடந்தால் டிலான் பெரேரா அந்த பதவியில் போட்டியிட மாட்டார் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை முன்னிறுத்துவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
