காணி கபளீகர வர்த்தமானியை ஆட்சேபித்து சுமந்திரன் வழக்கு
வடக்கில் காணி தொடர்பில் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும்படி உத்தரவிடவும், செல்லுபடியற்றதாக அறிவிக்கவும் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் வழக்கு ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மனுதாரராகத் தாக்கல் செய்துள்ளார்.
காணி ஆணையாளர் நாயகம், காணி உரித்து நிர்ணய ஆணையாளர், காணி அமைச்சின் செயலாளர், காணி அமைச்சர், வடக்கு மாகாண காணி ஆணையாளர் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் எதிர் மனுதாரர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேற்படி காணிகளைச் சுவீகரிப்பது தொடர்பான அரசின் வர்த்தமானி அறிவித்தல் கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது.
செய்திக் குறிப்பு
இது தொடர்பில் மக்களின் கடும் எதிர்ப்பு வெளியானமையை அடுத்து இந்த வர்த்தமானியைக் கைவாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காணி அமைச்சு கடந்த 27ஆம் திகதி செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும், இதுவரை அந்த வர்த்தமானியைக் கைவாங்குவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் சுமந்திரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், சட்டத்தரணிகளான விரயன், குரியா போன்றோர் முன்னிலையாகி வாதிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri
