உயிரிழந்த ஊடகவியலாளருக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன் மற்றும் சாணக்கியன்!வெடித்தது சர்ச்சை
யாழில் கோவிட் தொற்று காரணமாக மரணித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் கடந்த 2 ஆம் திகதி மரணமடைந்ததைத் தொடர்ந்து யாழ். தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழ் பேசும் பல்வேறு தரப்பினரிடையேயும் குறித்த ஊடகவியலாளரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததுடன், நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாமையால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.09) அன்று தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சயந்தன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தியிருந்ததுடன், மரணித்த ஊடகவியலாளரின் பெற்றோருடனும் கலந்துரையாடி இருந்தனர்.
இவ்விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் பரவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர் பிரகாஸின் வீடு இன்றைய தினமே (14.09) தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு எவ்வாறு குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் தனிமைப்படுத்தல் அறிவித்தலை மீறிச் செல்ல முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சுகாதாரப் பிரிவினரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளியான இளம் ஊடகவியலாளர் பிரகாஸ் தசையழிவு நோய்த்தாக்கத்தால் சக்கரநாற்காலியின் துணையோடு இயங்கிய நிலையிலும், தனது திறமையாலும் ஏழுத்தாற்றலாலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த ஒருவராக விளங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
