கோட்பாட்டுக்கு முரணாக செயற்படும் கட்சிகள்: சுமந்திரனின் குற்றச்சாட்டு
சில கட்சிகள் கோட்பாட்டுக்கு முரணாக செயற்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவு நேற்றையதினம்(13.06.2025) நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முதல்வர் தெரிவில் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். யாழ். மாநகர சபையில் கூடுதலான ஆசனங்களை இலங்கை தமிழரசு கட்சி பெற்றமைக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.
துரதிர்ஷ்டவசமான சம்பவம்
எந்தெந்த சபைகளில் எவரெவர் அதிகூடிய ஆசனங்களை பெற்றுள்ளார்களோ அவர்கள் அந்த சபை நிர்வாகத்தை அமைப்பதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறியுள்ளோம்.
அந்த கோட்பாட்டுக்கு அமைவாக இன்றைய தெரிவு இடம்பெற்றிருக்கிறது. இந்த கோட்பாட்டையே வேறு சில கட்சிகளும் வலியுறுத்தி தாங்களும் சொல்லியதுடன் எங்களுடனும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
ஆனால், தாங்கள் அறிவித்த கோட்பாட்டுக்கு முரணாக இன்று அந்த கட்சிகள் செயற்படுகின்றது. இது துரதிர்ஷ்டவசமான சம்பவம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
