யாழ். நோக்கி பயணித்த சுமந்திரனின் வாகனம் விபத்து
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பயணித்த வாகனம் ஏ9 வீதி - கிளிநொச்சியில் விபத்துக் குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சொகுசு வாகனம் மீது எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
சாரதியின் கவனயீனம்
இதன்போது சுமந்திரனின் வாகனத்திற்கும், மோட்டார் சைக்கிளுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்து தொடர்பில் எமது ஊடகப்பிரிவு சுமந்திரனை தொடர்பு கொண்டபோது,
''யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனது வாகனத்தின் மீது எதிரே வருகைதந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டது.
மோட்டார் சைக்கிளில் சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம்.
விபத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. தனது வாகனத்திற்கே சேதம் ஏற்பட்டுள்ளது." என விளக்கமளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
