வரவு செலவுத்திட்டம் தொடர்பில் சுமந்திரன் அதிருப்தி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
சுமந்திரன் அதிருப்தி
மேலும் தெரிவிக்கையில்,“இந்த வரவு - செலவுத்திட்டம் செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்துடன் வற் வரி அதிகரிப்பு அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் என்பதுடன், மக்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணங்களும் இந்த வரி அதிகரிப்பினூடாகக் கிடைக்காது போகலாம்.”என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம்
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசின் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை 2ஆம் மற்றும் 3ஆம் வாசிப்புகள் மீதான விவாதம் தொடரும். 2 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு இடம்பெறும்.
2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் திருத்த சட்டமூலம், நிதி அமைச்சர் என்ற
ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் நேற்று
முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.