சுமந்திரனுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் விசேட பேச்சுவார்த்தை
புதிய இணைப்பு
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்.
நினைவேந்தல் நிகழ்விற்கு முன்னர் இன்று காலை 1716050200 யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை((M. A. Sumanthiran) முல்லைத்தீவு 'அலை' சுற்றுலா விடுதியில் காலை உணவுடன் சந்தித்து சுமார் ஒன்றரை மணிநேரம் விரிவான கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன்,
“இன்று காலை 8 மணி தொடக்கம் 9.30 மணி வரை சந்திப்பு நடைபெற்றது.
காலை உணவுடன் ஒன்றரை மணிநேரம் மிக ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசியல் தீர்வு, பொறுப்புக் கூற வைத்தல் பற்றி எல்லாம் ஆழமாக உரையாடினோம்.
ரோம் ஒப்பந்தத்தில் இலங்கையை ஒப்பமிட வைக்கும் அழுத்தத்தை நாம் அரசுக்குத் தொடர்ந்து கொடுப்பதை உத்தியாக அவர் வரவேற்றார்.
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வைப்பதற்கு, அந்த ஒப்பந்தத்தில் இலங்கையைக் கையெழுத்திட வைப்பதுதான் ஒரே மார்க்கம் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.'' - என்றார்
முதலாம் இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(M. A. Sumanthiran), முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்தி இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுடரேற்றி அஞ்சலி
கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்குச் சென்ற அவர், முதலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |