யாழ். சுழிபுரம் முருகன் ஆலய வர்த்தமானி மீளப்பெறவேண்டும்: சரவணபவன் எச்சரிக்கை
யாழ். சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய அரச மரம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெறவேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திற்கு இன்று(03.08.2023) நேரில் சென்று குறித்த விடயம்தொடர்பில் ஆலய நிர்வாக சபையினருடன் நேரடியாக கலந்துரையாடி குறித்த அரச மரத்தை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்தினரால் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவித்து , பின்னர் நாங்கள் ஒருவரும் அசைய முடியாத நேரத்தில் , அவர்கள் இங்கே வருகை தந்து அளவுகள் எல்லாவற்றையும் எடுத்து , இதனைச் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது .
பெப்ரவரி மாதம் மாதம் முதலாம் திகதி இந்த வர்த்தக மானி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயம் எங்கள் யாருக்கும் தெரியாது. நிர்வாக சபைக்கு கூட தெரியாது.
பௌத்த அடையாளங்கள்
இதன் நோக்கம் பௌத்த அடையாளங்களை இந்த யாழ் மாவட்டத்திலும், வட மாகாணத்திலும் ஏற்படுத்தி , " இது பௌத்தர்கள் வாழ்ந்த இடம்தான் " என எதிர்வரும் 10, 15 வருடங்களில் அதை நிரூபிக்கக்கூடிய ஏற்பாட்டைத்தான் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் .
இதற்குத் துணையாக இராணுவம் , பொலிஸார், கடற்படை எல்லாப்படைகளும் ஒன்றாக சேர்ந்து நிக்கின்றன. அவர்கள் எல்லோரும் சிங்களவர்கள் தான். 99 % சிங்களவர்கள் இருக்கின்றதால் அவர்களை மீறி தமிழர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றனர்.
எனவே இவர்களால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தகமானி மீளப் பெறப்பட வேண்டும். கோவில் நிர்வாகத்துடன் எந்தவித பேச்சுக்களையும் அவர்கள் பேசவில்லை. இது கோவில் நிர்வாகம். ஒரு தனியார் கோவில். அதற்கான உறுதி, நீதிமன்றகட்டளை எல்லாம் இருக்கின்றது.
இன அழிப்பு
அவற்றை வைத்துக்கொண்டு தாங்கள் நினைத்த படி வர்த்தகமானியில் பிரசுரித்திருக்கின்றார்கள். எனவே அவர்களுடைய இந்த பௌத்தமயமாக்கல் தீய நோக்கங்கள், அதாவது இலங்கை படையைச் சேர்ந்தவர்களிடமிருந்து எந்த பொதுமக்களும் விலகித்தான் நிற்போம்.
நாங்கள் ஒருகாலத்தில் வல்லமையுடன் தான் இருந்தோம். ஆனால் இப்பொழுது பலம் குன்றி இருக்கின்றோம். இந்த நிலையில் அவர்கள் எங்கள் மேல் ஏறி சவாரி செய்ய நினைக்கின்றார்கள். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து எதிர்ப்புகளை காட்ட வேண்டும்.
இதுவும் ஒரு வகையில் இன அழிப்புத்தான். எங்களுடைய கலாச்சாரம், சமயத்தில் அவர்கள் கை வைத்திருக்கின்றார்கள். இதுவும் ஒரு இன அழிப்புத்தான். எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சகல தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.







5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த ட்ரக்: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
