தனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு உண்மையான
விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு
கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள்
தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் பரபரப்பை
ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் யாழ்.குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான விஜிதா என்ற குடும்பப்
பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில்
கடமையாற்றி வந்தவர் என கூறப்படுவதுடன் , பெண்ணுக்கு 10 வயதான பெண் பிள்ளை
ஒன்றும் உள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,